தமிழ் நாட்காட்டி – மாதங்களும் 60 வருடங்களும்
தமிழ் நாட்காட்டி சூரியனை அடிப்படையாகக் கொண்டது. சூரியன் ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குள் நுழையும் நாள் (சங்கராந்தி) புதிய மாதத்தின் தொடக்கம். சூரிய அஸ்தமனத்திற்கு முன் சங்கராந்தி நிகழ்ந்தால் அன்றே மாதம் பிறக்கும்; இல்லையெனில் மறுநாள். சூரியன் மேஷ ராசியில் நுழையும் நாள் சித்திரை 1 – தமிழ்ப் புத்தாண்டு.
12 மாதங்கள்
- சித்திரை
- வைகாசி
- ஆனி
- ஆடி
- ஆவணி
- புரட்டாசி
- ஐப்பசி
- கார்த்திகை
- மார்கழி
- தை
- மாசி
- பங்குனி
60 வருடங்கள்
- பிரபவ
- விபவ
- சுக்ல
- பிரமோதூத
- பிரசோற்பத்தி
- ஆங்கீரச
- ஸ்ரீமுக
- பவ
- யுவ
- தாது
- ஈஸ்வர
- வெகுதான்ய
- பிரமாதி
- விக்கிரம
- விஷு
- சித்திரபானு
- சுபானு
- தாரண
- பார்த்திப
- விய
- சர்வஜித்
- சர்வதாரி
- விரோதி
- விக்ருதி
- கர
- நந்தன
- விஜய
- ஜய
- மன்மத
- துன்முகி
- ஹேவிளம்பி
- விளம்பி
- விகாரி
- சார்வரி
- பிலவ
- சுபகிருது
- சோபகிருது
- குரோதி
- விசுவாசுவ
- பரபாவ
- பிலவங்க
- கீலக
- சௌமிய
- சாதாரண
- விரோதகிருது
- பரிதாபி
- பிரமாதீச
- ஆனந்த
- ராட்சச
- நள
- பிங்கள
- காளயுக்தி
- சித்தார்த்தி
- ரௌத்திரி
- துன்மதி
- துந்துபி
- ருத்ரோத்காரி
- ரக்தாட்சி
- குரோதன
- அட்சய